Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM
விழுப்புரம் மாவட்டத்தில் பொங்க லுக்குப் பிறகு நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விழுப்புரம் ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று மாலை விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியது:
செஞ்சி, மேல்மலையனூர் வட்டங்களில் 110 ஏரிகள் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஏரிகளை நிர்வகிக்க தனி உபகோட்டம் அமைக்க வேண்டும். செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், அங்கி ருந்த விவசாயிகளின் பணத்தையும் பறிமுதல் செய்து விட்டனர். அதனைதிரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவைத்தொகையை அளிக்காத கரும்பு ஆலைகளுக்கு வேறு ஆலைகளில் பதிவு செய்யப்பட்ட கரும்பை அரைக்க அனுமதி அளிக்கக்கூடாது.
பொங்கலுக்குப் பிறகு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், " எஸ்பி யிடம் பேசி விவசாயிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைதிரும்ப அளிக்க நடவடிக்கைஎடுக்கப்படும். செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை விவசாயிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT