Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM

எருமப்பட்டி ஒன்றியத்தில் ரூ.2.31 கோடியில் புதிய திட்டப்பணிகள் தொடக்கம்

நாமக்கல்

நாமக்கல் அருகே எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மு.கோட்டைக்குமார் தலைமை வகித்தார். சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று பெருமாம்பட்டி ஊராட்சியில் ரூ.17.64 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதுபோல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூ.2.31 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பொ.பாலமுருகன், ஆவின் பொதுமேலாளர் சுந்தரவடிவேலு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஆர்.சாரதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x