Published : 28 Dec 2020 07:17 AM
Last Updated : 28 Dec 2020 07:17 AM
தமிழகம் முழுவதும் வணிகர்களின் வாக்கு வங்கியை ஒருங்கிணைத்து வருகிறோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தி.மலையில் செய்தியாளர் களிடம் நேற்று விக்கிரமராஜா கூறும் போது, “சென்னையில் விதிக்கப்பட்ட குப்பை வரியை திரும்ப பெற்றுள் ளதை வரவேற்கிறோம்.
திருவண்ணாமலையில் அதிகளவு குப்பை வரி வசூலிக் கப்படுகிறது. 4 மாடி கட்டிடத்துக்கு ரூ.12 ஆயிரம் வசூலிக்கின்றனர். தமிழகம் முழுவதும் நகராட்சி கடைகளின் வாடகை தொகை, மாவட்டம் வாரியாக வேறுபடுகிறது. மாநிலம் முழுவதும் வாடகையை முறைப்படுத்த வேண்டும் என உள்ளாட்சி துறை அமைச்சரை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பழிவாங்கும் ஆணையாளர்
இதே போராட்டம் தமிழகம் முழுவதும் பரவாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் வணிகர் களை சந்தித்து ஆய்வுக் கூட்டத்தைநடத்தி வருகிறோம். அப்போது, வணிகர்களின் கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறோம். கரோனா தொற்று பரவிய 10 மாத காலத்தில், வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் பாதிப்புகளை நேரடியாக கேட்டு அறிந்து வருகிறோம். அதே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வணிகர்களின் வாக்கு வங்கியை ஒருங்கிணைத்து வருகிறோம்.
ஆட்சி மன்றக் குழு கூட்டப்பட்டு என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ, அதன்படி வாக்கு வங்கி நகர்த்தப்படும். தேர்தல் தேதி அறிவித்தவுடன், தலைமை நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டடு சரியான முடிவெடுக்கப்படும். வியாபாரி களின் பல கோரிக்கைகள் நிலுவை யில் உள்ளன.
வணிகர்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்குதான் எங் களுடைய வாக்கு என்பதில் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்று வோம் என எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் எனவலியுறுத்துகிறோம். வியாபாரி களுக்கு ஓய்வூதிய திட்டம் வேண் டும் என்ற எங்களது கோரிக்கை கிடப்பில் உள்ளது. சரியான பாதையில் யார்? செல்லக் கூடியவர் என அடையாளம் கண்டு வாக்களிப்போம். வணிகர்கள் கடந்த 10 ஆண்டுகளாக, தங்களை பாதுகாப்பதில் பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT