Published : 27 Dec 2020 03:15 AM
Last Updated : 27 Dec 2020 03:15 AM

கடலூர் மாவட்டத்தில் கிராமப்புற மகளிருக்கு ரூ.8.5 கோடிக்கு விலையில்லா வெள்ளாடுகள் பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

கடலூர் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தொழில்துறை அமைச்சர் சம்பத் பயனாளிகளுக்கு புறக்கடை கோழி குஞ்சுகளை வழங்கினார்.

கடலூர்

வசதியற்ற கிராமப்புற மகளிருக்கு தமிழக அரசால் கோழி குஞ்சுகள், ஆடுகள் வழங்கப்பட்டு வருகின் றன.

இத்திட்டத்தில், தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள 14ஊராட்சி ஒன்றியங்களில் 5, 200 மக ளிர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நபர் ஒருவருக்கு 1 மாத வயது டைய 25 நாட்டின கோழி குஞ்சுகள்வழங்கப்படுகின்றன. மேலும், 49கிராமங்களில் 6, 669 பயனாளிக ளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 26,676 விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கப் படுகின்றன.

இத்திட்டத்தை, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலை யில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று தொடங்கி வைத்து,பயனாளிகளுக்கு வழங்கினார்.

கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் கூறியது:

கடலூர் மாவட்டத்தில் 2020-2021 ம் ஆண்டில் ரூ.8 கோடியே 52 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா செம் மறி மற்றும் வெள்ளாடுகள் வழங் கப்பட்டுள்ளன. ஊரக புறக்கடைக் கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 1லட்சத்து 30 ஆயிரம் கோழிகள் வழங்கப்பட உள்ளன.

வடகிழக்கு பருவமழை காலங் களில் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, ஒன்றியத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 40 விரைவு மருத்துவக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு 808 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 2 லட்சத்து 9 ஆயிரத்து 763 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழி அதிக நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது. எனவே மிக மிகக் குறைந்த தொழில் நுட்பத்தில் அதிக வருமானம் ஈட்டக் கூடிய தொழிலாகும். நாட்டுக்கோழியை ஒரு செல்வம் கொழிக் கும் அட்சயப்பாத்திரம் என்றே சொல்லலாம் என்றார்.

இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் குபேந்திரன், உதவிஇயக்குநர் கஸ்தூரி அரசு அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x