Published : 27 Dec 2020 03:15 AM
Last Updated : 27 Dec 2020 03:15 AM

தென் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்களின் சேவை 1 மாதம் நீட்டிப்பு

திருநெல்வேலி

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்தமிழக மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்படுகிறது. சில சிறப்பு ரயில்கள் டிசம்பர் மாத இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - மும்பை சிறப்பு ரயில், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பையில் இருந்து புறப்படும் மும்பை - நாகர்கோவில் சிறப்பு ரயில், ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி -பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரயில், செவ்வாய்க்கிழமைகளில் பிலாஸ்பூரில் இருந்து புறப்படும் பிலாஸ்பூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில், புதன்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி - மும்பை தாதர் வாராந்திர சிறப்பு ரயில், வியாழக்கிழமை மும்பை தாதரில் இருந்து புறப்படும் தாதர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் ஆகியவற்றின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காந்திதாம் - திருநெல்வேலி வாராந்திர பண்டிகை கால சிறப்பு ரயில் காந்திதாமிலிருந்து திங்கட்கிழமைகளில் அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். திருநெல்வேலி - காந்திதாம் வாராந்திர பண்டிகை கால சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் அதிகாலை 2.35 மணிக்கு காந்திதாம் சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x