Published : 26 Dec 2020 03:15 AM
Last Updated : 26 Dec 2020 03:15 AM
விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 29-ம் தேதி தேசிய இளைஞர் விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை இளைஞர் தேசிய இளைஞர் விழாவாக மத்திய விளையாட் டுத் துறை அமைச்சகம் ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது. அந்த வகையில் தமிழக விளை யாட்டு மேம்பாட்டு துறை சார்பில்விழுப்புரம் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகின்ற 29-ம் தேதிவிழுப்புரத்தில் நடைபெற உள்ளது.
பாரம்பரிய இசை கருவிகள், பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு, நாட்டுப்புறபாடல்கள், இந்திய இசை, நடனம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனங்கள், நவீனநடனங்கள், பாரம்பரிய உடைஅலங்காரம், நவீன உடை அலங்காரம், வீதி நாடகம் ஓவியம், பென்சில் வரைப்படம்,சிற்பம் தயாரித்தல், புகைப்படம் எடுத்தல், கட்டுரை (ஆங்கிலத்தில்) புதிய இந்தியாவின் உற்சாகம், கவிதை எழுதுதல் (ஆங்கிலத்தில்) பாரம் பரிய விளையாட்டு- யோகா ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
போட்டியாளர்கள் தேவையான அனைத்து உபகரணங்களையும் தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.போட்டியாளர்கள் தங்களுடைய போட்டிக்கான பதிவினை நல்ல தெளிவான ஒளி, ஒலி அமைப்போடு பதிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக மேலும் விவரங் களுக்கு 7401703485, 9789583510 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT