Published : 24 Dec 2020 07:23 AM
Last Updated : 24 Dec 2020 07:23 AM
விவசாயிகள் எதிர்ப்பை மீறி அவிநாசியை அடுத்த தத்தனூர் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கக் கூடாது என கொமதேக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த தத்தனூர் ஊராட்சிப் பகுதியில், சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு 889 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைக் கைவிடக் கோரி அப்பகுதி விவசாயிகள் போராடத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக ஊராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவிநாசி பகுதியில் பாசனவசதி பெற அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கும் தமிழக அரசு, தற்போது சிப்காட் பெயரில் நிலத்தைக் கையகப்படுத்துவது கண்டனத்துக்குரியது.
சிப்காட்டில் இயங்கப் போகும் தொழிற் சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT