Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட் டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நெடுஞ்சாலை துறை தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்தார்.
`நிவர்', `புரெவி’ புயல் தாக்கம்,தொடர் பலத்த மழை காரணமாகவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருமளவில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
நெடுஞ் சாலைகளில் ஏற்பட் டுள்ள சேதங்களையும், சாலை மேம்பாட்டு பணிகளையும் நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் சாந்தி ஆய்வுசெய்தார். உளுந்தூர்பேட்டை பகுதியில் சேத மடைந்த சாலைகளையும், உளுந் தூர்பேட்டை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அருகில் கட்டப்பட்டு வரும் பாதசாரிகள் மேம்பாலப்பணிகளையும் ஆய்வு செய்தார். ஆசனூர்- திருக்கோவிலூர் சாலையில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கோவிலூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின்குறுக்கே உயர்மட்ட மேம்பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார். கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கான திட்ட அறிக்கை குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர், அரகண்டநல்லூர், திருக்கோவிலூர்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் வழிந்தோடிய பகுதிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்டப் பொறி யாளர் ராஜகுமார், உதவிக் கோட்டப் பொறியாளர்கள் கவிதா, திருநாவுக்கரசு, ராகுல், இளஞ்செழியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT