Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2.25 லட்சம் டன் இலக்குடன் கரும்பு அரவை பணி தொடக்கம் தினசரி 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நேற்று கரும்பு அரவை பணிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம். அருகில், மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்ளிட்டோர்.

வேலூர்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், மின் உற்பத்தி ஆலையில் இருந்து தினசரி 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படுகிறது. இங்கு, 2020-21 ஆண்டுக்கான கரும்பு அரவைப் பணிகள் நேற்று தொடங்கியது. ஆலையில் நடப்பாண்டில் ரூ.2.25 லட்சம் டன் அரவைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அரவைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று தொடங்கி வைத்தார். இதில், மாநிலங்களவை அதிமுக உறுப் பினர் முகமது ஜான், சர்க்கரை துறை கூடுதல் இயக்குநர் தேவகி, கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் சங்கர், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு ஆகியோர் பங்கேற்றனர்.

கரும்பு அரவைப் பணி தொடங்கியது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உற்பத்தி செய்யப் படும் சாகுபடி பரப்பளவு 2 ஆயிரத்து 89 ஹெக்டேராக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 1,099 ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் கரும்பு அரவைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், போளூர் தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து 50 ஆயிரம் டன் கரும்பு மற்றும் ஆம்பூர், கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து கூடுதலாக கரும்பு இறக்குமதி செய்யப்படும். இதன்மூலம் மொத்தம் 2.25 லட்சம் டன் கரும்பு அரவைக்கு இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. மாநில அரசின் பரிந்துரை நிலை நிலுவைத் தொகை ரூ.102 கோடியாக தமிழக அரசு ஒதுக்கீடு செய்து விவசாயிகளுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது’’ என்றார்.

10 மெகாவாட் மின் உற்பத்தி

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், மின் உற்பத்தி திட்டமும் ஓரிரு நாளில் தொடங்க உள்ளது. இங்குள்ள மின் உற்பத்தி ஆலை தினசரி 15 மெகாவாட் மின் உற் பத்தித்திறன் கொண்டது. நடப் பாண்டில் தினசரி 10 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் கூறும்போது, ‘‘வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் 10 மெகாவாட் மின்சாரத்தில் 3 மெகாவாட் மின்சாரம் சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். மீதமுள்ள 7 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு விற்பனை செய்யப்படும். கடந்த 4 ஆண்டுகளில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடியே 86 யூனிட் அளவுக்கான மின்சாரம் விற்பனை செய்யப்பட்டு ரூ.19 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x