Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு சுடரேந்தி அஞ்சலி

புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாநிலச் செயலாளர் முத்தரசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் கட்சியினர். படம்: எஸ்.குரு பிரசாத்

ஈரோடு

டெல்லி விவசாயிகளின் போராட்டத் தில் உயிர்நீத்த விவசாயி களுக்கு அனைத்துக் கட்சியினர் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இப்போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோடு சூரம்பட்டி நான்கு சாலைப் பகுதியில் நேற்று நடந்தது.

திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் மெழுகு வர்த்தியை ஏந்திய படி, இறந்த விவசாயி களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.எம்.முனுசாமி, கி.வே.பொன்னையன், சி.எம்.துளசிமணி, காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி, மாநகர மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தருமபுரி

தருமபுரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் விடுதலைவிரும்பி முன்னிலை வகித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தேவராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதேஸ்வரன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் மணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x