Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM
திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் தென்மண்டல காவல்துறை தலைவர் சி.முருகன் வருடாந்திர ஆய்வு மேற் கொண்டார்.
இதையொட்டி பாளையங் கோட்டை ஆயுதப்படை ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் ஆயுதப் படை காவலர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் காவல்துறை அணி வகுப்பை பார்வையிட்டனர். காவலர்களிடம் குறைகளை கேட்ட ஐஜி, காவலர்களுக்கான பொறுப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிவுறுத்தினார்.
ஆயுதப்படை பிரிவின் பதிவேடுகள், கோப்புகள், ஆயுதங்கள் வைப்பறை, வருண், வஜ்ரா வாகனங்கள், இருசக்கர ரோந்து வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார். ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்றுகளை ஐஜி நட்டு வைத்தார். துணை காவல் கண்காணிப்பாளர் சிசில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT