Published : 19 Dec 2020 03:15 AM
Last Updated : 19 Dec 2020 03:15 AM
“கால்வாய்கள், மடைகளை பழுது பார்க்காததால் குளங்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என, குறைதீர் கூட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் விஷ்ணு பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் வரை பெறவேண்டிய இயல்பான மழையளவு 814.80 மி.மீ. இவ்வாண்டு கடந்த 17-ம் தேதி வரை 695.37 மி.மீ. மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இது இவ்வாண்டின் சராசரி மழை அளவைவிட 15 சதவீதம் குறைவாகும். தற்போது அணைகளில் 84.44 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் 91.42 சதவீதம் நீர் இருந்தது. மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 14,261 ஹெக்டேரில் நெல், 757 ஹெக்டேரில் சிறு தானியங்கள், 6,629 ஹெக்டேரில் பயறுவகை பயிர்கள், 653 ஹெக்டேரில் பருத்தி, 31 ஹெக்டேரில் கரும்பு, 674 ஹெக்டேரில் எண்ணெய் வித்துகள் பயிரிடப்பட்டுள்ளன.
காப்பீடு செய்யலாம்
ஏர்வாடி, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, பூலம், விஜயநாரா யணம், முன்னீர்பள்ளம், ராதாபுரம், சமூகரெங்கபுரம், திசையன்விளை, லெவிஞ்சிபுரம், பழவூர், பணகுடி, வள்ளியூர் குறுவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம் பயிருக்கு காப்பீடு செய்யலாம்.
வேளாண்மைத்துறையின் அனைத்து திட்டங்கள் குறித்தும் முழுமையாக தெரிந்துகொள்ள ஏதுவாக உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் இம்மாதம் முதல் கிராம அளவில் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 10 முன்னோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மராமத்து பணிகள்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகள் 32 பேர் கடும் குளிரில் உயிரிழந்தது குறித்தும் கூட்டத்தில் விவசாயி சொரிமுத்து உள்ளிட்டோர் பேசினர். இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டனர்.
களக்காடு பகுதியில் வாழை கொள்முதல் நிலையம் மற்றும் குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
பதில் அளிப்பதில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT