Published : 19 Dec 2020 03:15 AM
Last Updated : 19 Dec 2020 03:15 AM
திருநெல்வேலி அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அஞ்சல் கோட்டத்தில் வரும் 30-ம் தேதி காலை 11 மணியளவில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் தேர்வுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஆர்வம் உள்ளவர்கள், வரும் 30-ம் தேதி பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 2-வது தளத்திலுள்ள திருநெல்வேலி கோட்ட அலுவலகத்தில் தங்களது வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதார் நகல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.
முகவர்கள் பணிக்கான கல்வித் தகுதி- 10-ம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு- 18 முதல் 50 வரை, ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படைவீரர்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்கலாம். கள அலுவலர் பணிக்கான வயது வரம்பு- ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள், அதிகாரிகள் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணி ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் தகுதி உடையவர்கள். அவர்கள் மீது துறை ரீதியாக எவ்வித ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்கக் கூடாது. தேர்வு பெற்ற நேரடி முகவர்கள், களஅலுவலர்கள் ரூ.5 ஆயிரம் வைப்பு தொகை செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT