Published : 19 Dec 2020 03:15 AM
Last Updated : 19 Dec 2020 03:15 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலப்பட உரங்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என ஆட்சி யருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அப்போது விவசாயிகள் பேசும் போது, “விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக் கப்படுகின்றன. அதற்காக, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது இல்லை. நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அப்படி இருக்கும்போது, 2 புயலால் பயிர் கள் பாதிக்கப்பட்டுள்ள தி.மலை மாவட்டத்தை பார்வையிடாமல் மத்திய அரசு புறக்கணித்துள்ளது.
வன விலங்குகளால் ஏற்படும் பயிர்ச்சேத இழப்பீடு பெற கால அவகாசத்தை 15 நாட்களாக நீட்டிக்க வேண்டும்.
தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம், கொள்முதல் செய்யப் பட்ட கரும்புகளுக்கான தொகையை வழங்கவில்லை. அதனை பெற்றுத்தர வேண்டும். கலப்பட உரங்கள் விற்பனையை தடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் தொகையை தள்ளு படி செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமம் வாரியாக கால்நடை சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் நீர் பாசனக் கால்வாய்கள் தூர்ந்து கிடக்கிறது. குப்பநத்தம் அணையில் இருந்து உச்சிமலைக்குப்பம் உட்பட 6 ஏரிகளுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யாறு - தென்பெண்ணையாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பால் கொள்முதல் தொகையை உடனுக்குடன் வழங்க வேண்டும்” என்றனர்.
பயிர் காப்பீடு அவசியம்
ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசும்போது, “அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய வேண்டும். அப்போதுதான், பயிர்கள் சேதமடையும்போது உரிய இழப்பீடு கிடைக்கும். உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில், மாற்று வழித்தடம் அமைக்க முடியாது. உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்க உத்தரவிடுகிறேன்.
ஒரு மாதம் கால அவகாசம்
மத்திய குழு பார்வையிட வில்லை என்றாலும், பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கு புயல் பாதிப்பு நிவாரணம் பெற்றுத்தரப்படும். ஏரி மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறை யினர் சீர் செய்ய வேண்டும். தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒரு மாதத்தில் கொள்முதல் செய்யப் பட்ட கரும்புக்கான தொகையை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். கலப்பட உர விற்பனையை தடுக்க, அதிரடி ஆய்வு நடத்தி சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT