Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM

கள்ளக்குறிச்சியில் தாழ்வான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது மணிமுக்தா அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

விருத்தாசலத்தில் மணிமுக்தா ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம். உள்படம்: மணிமுக்தா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் கிரன்குராலா.

கள்ளக்குறிச்சி

மணிமுக்தா அணையிலிருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் வெள்ளஅபாய எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த மழையினால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளது.சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 22 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கச்சிராயப்பாளையத்தில் உள்ள கோமுகி அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மணிமுக்தா அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கிரன்குராலா நேற்று அணையை நேரில் பார்வையிட்டு, தண்ணீர் வெளியேற்றத்தை அதிகரிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மணிமுக்தா அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி மழைவெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கம்மாபுரம், சொட்ட வனம், மேமாத்தூர், ஆதனூர் உட்பட 30 கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட் டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் நைனார்பாளை யம், மாமணந்தல், பகண்டை கூட்டுரோடு, புத்தணந்தல் ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்ததால், மக்கள் பாத்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x