Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM
கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய குறிஞ்சிப்பாடி கிளை நூலகத்தின் 3-ம் நிலை நூலகர் அருள்ஜோதிக்கு 2020ம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதினை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 115 நூலகங்கள் உள்ளன. டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்குவதற்கு தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் ஒரு நூலகர் தேர்வு செய்யப்பட்டு விருது வாங்கப்படுகிறது.
நடப்பாண்டில் கடலூர் மாவட்டத்தில், குறிஞ்சிப்பாடி கிளை நூலகத்தில் பணிபுரிந்து வரும் அருள்ஜோதி இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. இவர், குறிஞ்சிப்பாடி நூலகத்திற்கு அரசின் மூலம் (10.5 சென்ட் ) இடம் பெற்று, சொந்த இடத்தில் நூலகத்தை செயல்பட வைத்துள் ளார். மேலும், நூலகத்தில் 65 புரவலர்களை ஏற்படுத்தி, நூலகத்திற்கு தேவையான தளவாட சாமான்களும் நன்கொடை களையும் பெற்று நூலகத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளார்.
இதனால் இவருடைய பெயர் அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் விருதுக்கான நற்சான்றிதழ், 50 கிராம் வெள்ளிப்பதக்கம், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி 3ம் நிலை நூலகர் அருள்ஜோதிக்கு நேற்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர் பால சரஸ்வதி, முதல்நிலை நூலகர் பாப்பாத்தி, இரண்டாம் நிலை நூலகர் சந்திரபாபு மற்றும் நூலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் ஒரு நூலகர் தேர்வு செய்யப்பட்டு விருது வாங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT