Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று காத்திருப்புப் போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங் களையும், மின்சார சட்டத் திருத்த மசோதாவையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் டிச.14, 15, 16 ஆகிய 3 நாட்கள் ஆட்சியர் அலுவலகங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த ஏற்கெனவே அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சூரியன் தலைமையில் ஒருங்கிணைப் புக் குழுவினர் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட ஊர்வல மாகச் சென்றனர். அவர்களை, ஆட்சியர் அலுவலகத்துக்கு சற்று முன்னதாகவே போலீஸார் தடுத்து நிறுத்தியதால், அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வா கிகள் உட்பட 150 பேரை போலீ ஸார் கைது செய்தனர்.
தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமையிலான விவசாயிகள் சிந்தாமணி அண்ணா சிலை அருகே கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியமங்கலத்தில் கனல் கண்ணன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று தொடங்கிய தொடர் காத்திருப்புப் போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை வகித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் நடைபெற்ற போராட்டத் துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர்கள் எஸ்.சி.சோமையா, ஏ.ராமையன், நடராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற காத்தி ருப்புப் போராட்டத்தில், எம்எல்ஏ எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் தள்ளுமுள்ளு
தஞ்சாவூரில் ஆட்சியர் அலு வலகம் முன்பு போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததால், தஞ்சை பனகல் கட்டிடம் அருகே திறந்தவெளியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமையில் நேற்று காத்திருப்புப் போராட் டம் நடைபெற்றது. இப்போராட்டத் துக்கு அம்மாப்பேட்டையிலிருந்து வந்த விவசாயிகளை போலீஸார் தடுத்ததால், கோவிலூரில் டிராக்டர் களுடன் மறியலில் ஈடுபட்டனர்.இதேபோல பல்வேறு இடங்க ளில் விவசாயிகளை போலீஸார் தடுத்ததால் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே போராட்டக்களத் துக்கு நாற்காலிகளை கொண்டு வந்த விவசாயிகளை டிஎஸ்பி சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தியதால், அங்கு இருதரப்பினரிடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. அப்போது, போலீஸார் மீது விவசாயிகள் நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த இந்திய தேசிய மாதர் சம்மேளன ஒன்றியச் செயலாளர் எஸ்தர்லீமா, போலீஸாரின் பார்வை யில்படாமல் 70 கி.மீ தொலைவுக்கு டிராக்டரை ஓட்டி வந்து தஞ்சாவூர் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், விசிக மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி ஆகியோர் தலைமை வகித்தனர். தஞ்சாவூர் ரயிலடியில் பாசிச பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவர் பி.எஸ்.மாசிலா மணி தலைமையில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காரைக்காலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் புதுச்சேரி மாநில அரசியல் குழு செயலாளர் அரசு.வணங்காமுடி தலைமை வகித்தார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு போலீஸார் அனு மதி மறுத்ததால், நாகை அவுரித் திடலில் நேற்று தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் எம்எல்ஏ மதிவா ணன் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர். இதேபோல, மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன் துரைராஜ் தலைமையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT