Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மக்கள் நீதிமன்றம் நடை பெற்றது.
மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,897 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில், 1,199 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.21 கோடியே 24 ஆயிரத்து 314 மதிப்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. மேலும், மோட்டார் வாகன விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு ரூ.54 லட்சம் மதிப்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. நீதிபதிகள் ஜெயந்தி, சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT