Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM

2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் பணியிட எழுத்துத் தேர்வு மத்திய மண்டலத்தில் 72,207 பேர் எழுதினர்

திருச்சி இ.ஆர். பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வில் பங்கேற்க வந்தவர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி சேகரித்துவைக்கும் போலீஸார்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

மத்திய மண்டலத்தில் நேற்று நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வை 72,207 பேர் எழுதினர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான எழுத் துத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களிலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

திருச்சி மாநகரில் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, இ.ஆர் மேல்நிலைப் பள்ளி உட்பட 11 மையங்களில் தேர்வு நடை பெற்றது. இதில் பங்கேற்க 5,950 பேருக்கு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டிருந்தது. அவர்க ளில் 5,369 பேர் தேர்வில் பங்கேற்றனர். 581 பேர் வரவில்லை. இதேபோல, திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலுள்ள 26 மையங்களில் தேர்வெழுத 14,930 பேருக்கு நுழைவுச் சீட்டு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் 13,297 பேர் தேர்வில் பங்கேற்றனர். 1,633 பேர் வரவில்லை. தேர்வு மையங்களை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் 6,832 பேர் தேர்வெழுத நுழைவுச் சீட்டு பெற்றிருந்தனர். 9 மையங்களில் நடைபெற்ற தேர்வை 6,171 பேர் எழுதினர். சென்னை ஆயுதப்படை காவல் துறைத் தலைவர் தமிழ்ச்சந்திரன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.னிவாசன் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 3,794 பேர் தேர்வுக்கு விண்ணப்பித் திருந்தனர். 7 மையங்களில் நடைபெற்ற தேர்வை 3,386 பேர் எழுதினர். 408 பேர் வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பார்வையிட்டார்.

கரூர் மாவட்டத்தில் 3 மையங் களில் நடைபெற்ற தேர்வை 5,085 பேர் எழுதினர். 522 பேர் வரவில்லை.

தேர்வு மையங்களை திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா பார்வையிட்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், காவல் துணை கண்காணிப்பாளர் முகேஷ்ஜெயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 12,196 பேர் பங்கேற்றனர். 149 பேர் வரவில்லை. தேர்வு மையங்களை காவல் துறை டிஐஜி மல்லிகா (தேர்வு சிறப்பு அலுவலர்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

நாகை மாவட்டத்தில் 8,608 பேர் தேர்வெழுத விண்ணப்பத் திருந்தனர். நாகை இஜிஎஸ் பிள்ளை கல்லூரி உட்பட 6 மையங்களில் நடைபெற்ற தேர்வை 7,675 பேர் எழுதினர். 933 பேர் வரவில்லை. தேர்வு மையங்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை தலைவர் எம்.டி.கணேச மூர்த்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் பார்வையிட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் நடை பெற்ற தேர்வை 6,866 பேர் எழுதினர். பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறை தலைவர் கல்பனா நாயக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 13,685 பேர் தேர்வெழுத விண்ணப் பித்திருந்தனர். 5 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 12,162 பேர் பங்கேற்றனர். 1,523 பேர் வரவில்லை. தேர்வு மையங்களை மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x