Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரமலைபாளையத் தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு பெங்களூரு விலுள்ள இந்திய ராணுவத்தின் 13-வது கார்வல் துப்பாக்கி படை பிரிவு வீரர்கள் டிச.3-ம் தேதி முதல் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
டிச.20-ம் தேதி வரை நடை பெறும் இப்பயிற்சியின்போது, இப்பகுதிகளில் மனிதர்கள் நட மாட்டமோ, மேய்ச்சலுக்காக கால்நடைகள் நடமாட்டமோ இருக் கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் வீரப்பூர் வீரமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி நல்லம்மாள்(35) என்பவர், மேய்ச்சலுக்குச் சென்று வீடு திரும்பாத தனது மாட்டைத் தேடி துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் பகுதிக்குச் சென்றார். அப்போது பயிற்சியில் இருந்த வீரர் ஒருவர் சுட்ட துப்பாக்கி குண்டு நல்லம்மாளின் வலது கால் தொடையில் பாய்ந்தது. இதில் காயமடைந்த அவர் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார்.
தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே பயிற்சிக்கு அனுமதி வழங்குவது வழக்கம். ஆனால் இம்முறை இரவு 7 மணியளவில், துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் காயமடைந்துள்ளதால், இரவு நேரத்திலும் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT