Published : 11 Dec 2020 07:31 AM
Last Updated : 11 Dec 2020 07:31 AM

தைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் நிற்கும் ரயில்கள்

திருநெல்வேலி

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மேல்மருவத்தூர் இருமுடி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை- சென்னை பொதிகை சிறப்பு ரயில், நாகர்கோவில்- சென்னை சிறப்பு ரயில் வரும் 28.1.2021 வரையும், கன்னியாகுமரி- டெல்லி நிஜாமுதீன் சிறப்பு ரயில் வரும் 27.1.2021 வரையும் நின்று செல்லும்.

சிறப்பு ரயில்கள்

திருவனந்தபுரம் - மதுரை ,தாம்பரம்- நாகர்கோவில், திருநெல்வேலி - தாதர் மற்றும் பிலாஸ்பூர் ரயில் நிலையங்கள் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, திருவனந்தபுரம்- மதுரை சிறப்பு ரயில் (எண் 06343) திருவனந்தபுரத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரை - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (எண் 06344) வரும் 24-ம் தேதிவரை மறு அறிவிப்பு வரும் வரை மதுரையிலிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும். இந்த ரயில்கள் வர்க்கலா, கொல்லம், காயன்குளம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, பாலக்காடு டவுன், கொல்லங்கோடு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதுபோல், தாம்பரம்- நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (எண் 06065) வரும் 16-ம் தேதி முதல் ஞாயிறு, திங்கள், புதன் கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் வரும் 17-ம் தேதி முதல் நாகர்கோவிலிலிருந்து திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலி- பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06070) வரும் 13-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9.35 மணிக்கு பிலாஸ்பூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் வரும் 15-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பிலாஸ்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் காலை 8.15 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

கொங்கன் ரயில் பாதை வழியாக திருநெல்வேலி - மும்பை தாதர் சிறப்பு ரயில் (எண் 06072) திருநெல்வேலி வரும் 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை புதன்கிழமைகளில் திருநெல்வேலியிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தாதர் சென்று சேரும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் வரும் 17-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை வியாழக்கிழமை கிழமைகளில் இரவு 8.40 மணிக்கு தாதரில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x