Published : 11 Dec 2020 07:31 AM
Last Updated : 11 Dec 2020 07:31 AM

தொண்டையில் தென்னம் பிஞ்சு சிக்கியதால் உயிருக்கு போராடிய குழந்தைக்கு மறுபிறவி அளித்த மருத்துவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சாதனை

குழந்தை ரோஹித்.

திருவண்ணாமலை

தொண்டையில் தென்னம் பிஞ்சு சிக்கி ஆபத்தான நிலைக்கு சென்று விட்ட ஒன்றரை வயது குழந்தையின் உயிரை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.

இதுகுறித்து தி.மலை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் எம்ஆர்கே ராஜா செல்வம் கூறும்போது, “தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூக்கு மற்றும் வாயில் நுரையுடன், சுய நினைவு இல்லாமல் ஒன்றரை வயது குழந்தை ரோஹித் நேற்று இரவு (நேற்று முன் தினம் இரவு) அழைத்து வரப்பட்டார். திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையத்தில் இருந்து ஆபத்தான நிலையில் குழந்தையை அழைத்து வந்த தாய் நந்தினி உள்ளிட்டவர்கள், "ஏதோ ஒரு பொருளை மென்று தின்றபோது, மூச்சு, பேச்சு இல்லாமல் போனதாகவும், அது என்ன? பொருள் என தெரிய வில்லை" என்றனர். நாடித் துடிப்பு குறைந்ததால், கண் முன்னே குழந்தையின் உயிர் பிரிவது தெரிந்தது. அடுத்த 15 நிமிடங்களில் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்துவிட்டோம்.

இதனால், குழந்தையை அறுவை சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று, அதன் பிறகு சிகிச்சை அளிக்கக்கூடிய சூழ்நிலை இல்லை. மிக மோசமான நிலையில் குழந்தை இருந்தது. இதனால், அறுவை சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்வதை தவிர்த்து, அவசர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்த மயக்க மருந்து மருத்துவர் ஆனந்த்ராஜ் தலைமையிலான குழுவை வரவழைத்து, சிகிச்சையை தொடங்கினோம்.

LARYNGO SCOPE முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை மூலம் வாயை திறந்து பரிசோதனை செய்து பார்த்தபோது, பச்சை நிறத்தில் ஏதோ ஒரு பொருள் தொண்டை குழியில் சிக்கி கொண்டிருப்பது தெரியவந்தது. அதனை எடுக்க முயன்றபோது, தொண்டை பகுதிக்குள் உருண்டுச் சென்றது. குழந்தையின் நிலையில் மேலும் ஆபத்து ஏற்பட்டது.

பின்னர், கடுமையான முயற் சிக்கு பிறகு வாய் வழியாகவே, தொண்டை பகுதியில் சிக்கிய பொருளை வெளியே எடுத்தோம். அதனை பார்த்தபோது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. குழந்தையின் தொண்டை குழியில் தென்னம் பிஞ்சு சிக்கி கொண்டிருந்தது தெரிய வந்தது. 10 நிமிட போராட் டத்தில் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது.

பின்னர், செயற்கை சுவாசம் கொடுத்து, 20 நிமிடங்கள் எங்களது கண்காணிப்பில் வைத்திருந்தோம். அதன்பிறகு குழந்தையின் நிலையில் முன்னேற்றம் தெரிந்ததால், வார்டுக்கு அனுப்பி வைத்தோம். குழந்தை, இன்று (நேற்று) நன்றாக உள்ளார். நாளை (இன்று) டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு உள்ளது. குழந்தையை காப்பாற்ற மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை போராடினோம். என்னுடைய 15 ஆண்டு கால பணி யில், இப்படியொரு சம்பவத்தை பார்த்தது இல்லை. ஆபத்தான நிலையில் குழந்தை அழைத்து வரும்போது, அவசர சிசிச்சை பிரிவில் மருத்துவர்கள் இருந்த தால், குழந்தையின் உயிரை காப் பாற்ற முடிந்தது. 10 நிமிடம் தாமதித்திருந்தாலும், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். உயிரிழப்பை நோக்கி சென்ற குழந் தையை காப்பாற்றியது மனதுக்கு நிறைவை தருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x