Published : 11 Dec 2020 07:31 AM
Last Updated : 11 Dec 2020 07:31 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் 4 இடங்களில் நடைபெற உள்ளன என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக் கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் 4 இடங்களில் நடைபெற உள்ளன.

அதன்படி, வரும் 15-ம் தேதி திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், வரும் 17-ம் தேதி நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திலும், வரும் 22-ம் தேதி கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், வரும் 24-ம் தேதி ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

எனவே, தேசிய அடையாளஅட்டை இல்லாத மாற்றுத்திறனாளி கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது பாஸ்போர்ட் அளவுள்ள 4 புகைப்படங்கள், ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளின் அசல் மற்றும் நகல்களுடன் வந்து தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x