Published : 10 Dec 2020 03:16 AM
Last Updated : 10 Dec 2020 03:16 AM

யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் 8 வழிச் சாலைத் திட்டத்தில் முதல்வர் நல்ல முடிவெடுப்பார் அமைச்சர் கருப்பணன் தகவல்

ஈரோடு

யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் முதல்வர் பழனிசாமி நல்ல முடிவை எடுப்பார் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கோடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களைச் சேர்ப்பது, நீக்குவது மற்றும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணியில் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் பெண்கள் அதிமுகவிற்கு ஆர்வத்துடன் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதனையெல்லாம் பார்க்கும்போது, வாக்காளர் களிடம் நல்ல பெயர் எடுத்துள்ள முதல்வர் பழனிசாமியே, மீண்டும் முதல்வராகத் தொடர்வார்.

யாருக்கும் பாதிப்பில்லாத வகையில், எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். சாலையோர மேம்பாட்டுக்காக வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக தொடர்ந்து மரங்கள் நடப்பட்டு வருகின்றன, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x