Published : 10 Dec 2020 03:17 AM
Last Updated : 10 Dec 2020 03:17 AM

வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை திருவண்ணாமலையில் ராணுவ பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ராணுவப் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவப் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் கவுரவ் சேத்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஆட்சியர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம் சார்பில் தி.மலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ராணுவப் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 10-ம் தேதிதொடங்கி 26-ம் தேதி வரை நடை பெற உள்ளது. சென்னை, திருவள் ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக் குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற் கின்றனர்.

ராணுவப் பணிக்கு ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க கடந்த 01-03-20 முதல் 31-03-20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்த இளைஞர்கள் மட்டுமே பங்கேற் கலாம். ஆன்லைன் மூலம் 25 ஆயிரம் இளைஞர்கள் விண் ணப்பித்துள்ளனர். தினசரி 2 ஆயிரம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.

சிப்பாய் தொழில்நுட்பம், சிப் பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் (கால்நடை), சிப்பாய் எழுத்தர், ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணிகளுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில் பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு, இணையதளம் அல்லது விண்ணப்பித்த இளைஞர் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். முகாமுக்கு வரும்போது அனுமதி சீட்டை பிரின்ட் எடுத்துக் கொண்டு வர வேண்டும்.

இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். ராணுவ ஆள் சேர்ப்பு செயல்முறை என்பது முழுமையாக தானியங்கி செயல்பாடாகும். உடல் தகுதி, மருத்துவம் மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற யாரும் உதவி செய்ய முடியாது. கடின உழைப்பால் மட்டுமே தேர்வாக முடியும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், குடியுரிமை, ஜாதி மற்றும் பிறப்பு சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் பங்கேற்க வேண்டும். உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பொது நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். அனுமதி அட்டை மற்றும் இதர விவரங்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் வெளி யிடப்படும்” என தெரிவித் துள்ளார்.

ராணுவப் பணி ஆள் சேர்ப்பு முகாம் கடந்த ஏப்ரல் மாதம் நடை பெற இருந்தது. கரோனா பரவல் காரணமாக முகாம் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x