Published : 09 Dec 2020 03:15 AM
Last Updated : 09 Dec 2020 03:15 AM
பொன்னணியாறு மற்றும் கண் ணூத்து ஆகிய அணைகளுக்கு காவிரியில் இருந்து நீர் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் பழனி சாமி உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் பொன்னணியாறு அணையின் கொள்ளளவு 120 மில்லியன் கன அடி. திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் எலமணம் கிராமத்தில் உள்ள கண்ணூத்து அணையின் கொள்ளளவு 56.15 மில்லியன் கன அடி. இந்த இரு அணைகளும் பல ஆண்டுகளாக போதிய நீர் வரத்து இல்லாமல் பாசனத்துக்கு திறக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், விவசாயிக ளின் கோரிக்கையை ஏற்று கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மாயனூர் கதவணையில் இருந்து காவிரி ஆற்றின் வெள்ள உபரிநீரை நீரேற்றம் செய்து, இவ்விரு அணைகளுக்கும் நீர் வழங்கும் திட்டத்தைச் செயல் படுத்துவது தொடர்பான ஆய்வுப் பணிகளை ரூ.40 லட்சத்தில் மேற்கொள்ள முதல்வர் பழனி சாமி உத்தரவிட்டுள்ளார். இதை யடுத்து, இதற்கான ஆய்வுப் பணி கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டால் பொன்னணியாறு அணையின் கீழ் உள்ள முகவனூர் கிராமத்தில் உள்ள 1,957 ஏக்கர் விளைநிலங்களும், செக்கணம் மற்றும் பழையக்கோட்டை கிராமங்களில் உள்ள 144 ஏக்கர் விளைநிலங்களும், கண்ணூத்து அணையின் கீழ் உள்ள 734 ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுவதுடன், இந்தப் பகுதிகளில் குடிநீர் வசதியும் மேம்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT