Published : 09 Dec 2020 03:15 AM
Last Updated : 09 Dec 2020 03:15 AM
தி.மலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் தி.மலையில் நேற்று நடைபெற்றது.
மாவட்டச் செயலாளரும் ஆவின் தலைவருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மோகன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் பேசும்போது, “எந்த மாநிலத்திலும் செயல் படுத்த முடியாத பல்வேறு நலத் திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதனால், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என பிரதமர் உள்ளிட்டவர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழக அரசின் சாதனைகளை அடித்தட்டு மக்களிடம் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையினர் கொண்டு செல்ல வேண்டும்” என்றார். பின்னர், திமுக மற்றும் அமமுகவில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணைந்தனர். இதில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜன், நகரச் செயலாளர் செல்வம், நாராயணன், ஒன்றியச் செயலாளர்கள் குமாரசாமி, ஜெயப்பிரகாஷ், தொப்பளான், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT