Published : 08 Dec 2020 03:15 AM
Last Updated : 08 Dec 2020 03:15 AM
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதி விவசாயிகள் மணிமுத்தாறு நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் டானார்குளம், அச்சம்பாடு குளம், சந்திரன்குட்டி குளம் மூலம் பாசன வசதிபெறும் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: மணிமுத்தாறு பாசன திட்டத்தின்கீழ் மூலைக்கப்பட்டியில் டானார்குளம் மூலம் 500 ஏக்கர், அச்சம்பாடு குளம் மூலம் 150 ஏக்கர், சத்திரன்குட்டி குளம் மூலம் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவற்றுக்கான பிரதான வாய்க்கால் அம்பலம் அருகில் உள்ளது.
அங்கிருந்து கிளை வாய்க்கால்மூலம் குளத்துக்கு தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு தண்ணீர் வரும் போது 3 குளத்து விவசாயிகளும் தண்ணீரை ஓடை மூலம் பாதுகாப்பாக கொண்டுவரச்செய்வோம். ஆனால், தற்போது அதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீர் வரத்து தடைபடுகிறது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த குளங்களுக்கு தண்ணீர் வந்து சேரும் வகையில் நீர்வழி ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்ப ட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT