Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM
கடந்த வாரம் பெய்த ‘நிவர்’ புயலை விட தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் விழுப்புரம் மாவட்ட நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன
விழுப்புரம் மாவட்டத்தில் 506 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும், 779 ஏரிகள் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.
ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 445 ஏரிகள் மழை பெய்தால் மட்டுமே நிரம்பும் நிலையிலும், 334 ஏரிகள் ஆறு மூலமும், மற்றொரு ஏரி மூலமும் நீர் வரத்து பெற்றுள்ளது. இவைகளில் 410 ஏரிகள் 100 சதவீதமும், 269 ஏரிகள் 75 சதவீதமும், 87 ஏரிகள் 50 சதவீதமும், 13 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 506 ஏரிகளில் 175 ஏரிகள்100 சதவீதமும், 173 ஏரிகள் 75 சதவீதமும், 86 ஏரிகள் 50 சதவீதமும், 52 ஏரிகள் 25 சதவீதமும், 20 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாகவும் நிரம்பியுள்ளது.
ஆக மாவட்டத்தில் 585 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது. மேலும் வீடூர் அணையும் முழுமையாக நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினத்தை ஒப்பிடும் போது நேற்று மாவட்டத்தில் மழைப் பொழிவு சற்று குறைந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை வரை மழை நிலவரம்; மில்லி மீட்டரில், விழுப்புரம் 74, வானூர் 37, திண்டிவனம் 11, மரக்காணம் 33, செஞ்சி 14, திருவெண்ணைநல்லூர் 21 மொத்த மழை அளவு; 582.10, சராசரி மழை அளவு 27.72.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மரக்காணத்தில் உள்ள உப்பளங்களில் பல ஆயிரம் டன் உப்பு வெளி மாநிலங்களுகு ஏற்றுமதி செய்ய பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மழையால் கடந்த ஒரு வாரமாக லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மரக்காணம் வராததால் இப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள் உப்பை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT