Published : 05 Dec 2020 03:17 AM
Last Updated : 05 Dec 2020 03:17 AM
ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் தொடர் மழையின் காரணமாக, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 100 ஏரிகள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி யுள்ளன. ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர் மழையால் முக்கிய ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டு பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று முன்தினமும் பரவலான மழை பெய்த நிலையில், நேற்று பிற்பகல் 2 மணி வரை லேசான மழை பெய்தது.
மழைப்பதிவு நிலவரம்
வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மோர்தானா அணை பகுதியில் 7, வேலூரில் 16, குடியாத்தத்தில் 9.2, மேல் ஆலத்தூரில் 11.2, பொன்னை அணைக்கட்டில் 23.4, ராஜாதோப்பு கானாறு பகுதியில் 11 மி.மீ மழை பதிவாகியுள்ளன.ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் 8.4, ராணிப் பேட்டையில் 13.2, பாலாறு அணைக்கட்டு பகுதியில் 9, வாலாஜாவில் 12, ஆற்காட்டில் 16, சோளிங்கரில் 25, கலவையில் 27.2, காவேரிப்பாக்கத்தில் 22 மி.மீ மழை பதிவாகியுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடியில் 9.2, திருப்பத்தூரில் 11.4, ஆண்டிப்பனூர் ஓடை பகுதியில் 17, ஆலங்காயத்தில் 9.2, நாட்றாம் பள்ளியில் 10.4, ஆம்பூரில் 10 மி.மீ மழை பதிவாகியுள்ளன.
நீர்த்தேக்க அணைகள்
வேலூர் மாவட்டத்தில் உள்ள மோர்தானா நீர்த்தேக்க அணை 37.72 அடி உயரத்துடன் 261.36 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. அணைக்கு 460 கன அடி வீதம் நீர்வரத்து உள்ள நிலையில், அணை ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் முழுவதும் கவுன்டன்யா ஆற்றின் வழியாக ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டதுடன் பாலாற்றிலும் கலந்து வருகிறது.அதேபோல், காட்பாடி அருகே உள்ள ராஜாதோப்பு அணை 24.57 அடி உயரத்துடன் 20.52 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. அணையில் தற்போது 21.65 அடி உயரத்துடன் 14.65 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு தற்போது 7.52 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த் தேக்கம் 26.24 அடி உயரத்துடன் 112.20 மில்லியன் கன அடி கொள் ளளவு கொண்டது. அணைக்கு 30.74 கன அடி வீதம் நீர்வரத்து இருக்கும் நிலையில், அணையில் 25.98 அடி உயரத்துடன் 110.96 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அடுத்த சில நாட்களில் 6-வது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏரிகள் நிலவரம்
வேலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 24 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 91 முதல் 99 சதவீதம் வரை 2 ஏரிகளும், 71 முதல் 80 சதவீதம் வரை 3 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரை 15 ஏரிகளும், 25 சதவீதத்துக்குள் 41 ஏரிகளும், 8 ஏரிகளில் நீர்வரத்து இல்லை.ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 369 ஏரிகளில் 73 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 91 முதல் 99 சதவீதம் வரை 5 ஏரிகளும், 71 முதல் 80 சதவீதம் வரை 39 ஏரிகளும், 51 முதல் 70 சதவீதம் வரை 67 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரை 13 ஏரி களும், 25 சதவீதத்துக்குள் 160 ஏரிகளும், 12 ஏரிகளில் நீர்வரத்து இல்லை.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளில் சிம்மன புதூர், குரும்பேரி, பொம்மிகுப்பம்உள்ளிட்ட 3 ஏரிகள் முழு கொள் ளளவை எட்டியுள்ளன. குரும்பேரி ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரால் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டேரி, ஒட்டனேரி, கொள்ளநேரி, சின்னகுழந்தை ஏரிகளும் முழுமையாக நிரம்பியுள்ளன.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 100 ஏரிகள் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி யுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT