Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் கலை மன்ற விருதுக்கு விண்ணப் பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கலை பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட அளவில் 5 பேருக்கு கலை விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2018-19 மற்றும் 2019-20-ம் ஆண்டுக்கான மாவட்ட கலை விருதுகள் வழங்கப்பட உள்ளன. தி.மலை மாவட்ட கலை மன்றம் மூலம் இயல், இசை, நாடகம், நாட்டுப்புறக் கலை, ஓவியம் மற்றும் சிற்பம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
எனவே, குரலிசை, பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகளை இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகம், பொய்க்கால் குதிரை, கைச்சிலம்பம், தெருக்கூத்து கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
18 வயது மற்றும் அதற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயது உள்ளவர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயது உள்ளவர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51 முதல் 60 வயது உள்ளவர்களுக்கு கலை நன்மணி விருதும், 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலை முதுமணி விருது வழங்கப்பட உள்ளன.
தேசிய விருதுகள், கலைமாமணி விருதுகள் மற்றும் ஏற்கெனவே மாவட்ட கலை மன்றம் மூலம் விருது பெற்ற கலைஞர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. கலை விருதுக்கு விண்ணப்பிக்கும்போது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வயதுச் சான்று, முகவரிச் சான்று, தொலைபேசி எண், கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்பு உள்ள ஆவணங்களை இணைக்க வேண்டும். உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், சதாவரம், காது கேளாதோர் பள்ளி அருகே, காஞ்சிபுரம் 631502 என்ற முகவரிக்கு வரும் 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT