Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக மத்திய மண்டலத்தில் ரயில், சாலை மறியல், ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று போலீஸாரின் தடையை மீறி ரயில் மறியலில் ஈடுபடுவதற்காகச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்டோர். (அடுத்த படம்) திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில், கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை ராக்கெட் போல செய்து பறக்கவிட்ட தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர்.படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருச்சியில் ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், கரூரில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் மற்றும் பெரம்பலூர், நாகப் பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் ஆகியவை நேற்று நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கலந்துகொண்டனர்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலி றுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்தச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா பகுதியில் இருந்து மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் என 70 பேர் நேற்று ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

முன்னெச்சரிக்கையாக 3 இடங்களில் போலீஸார் தடுப்பு களை வைத்திருந்தனர். முதல் தடுப்பு அருகே ஊர்வலமாக வந்தவர்களை போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் தடுத்து நிறுத்தியதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனா லும், போராட்டக்காரர்கள் அனைத்து தடுப்புகளையும் தாண்டி ரயில் நிலையம் நோக்கி ஓடினர். அவர்களை பிரதான நுழைவு வாயில் பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தியதால், அங்கேயே தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சுரேஷ் தலைமையில் 11 பேர், விராலிமலை சந்திப்பு என்றழைக்கப்படும் மேம்பாலப் பகுதி வழியாக இறங்கி, தண்டவாளம் வழியாக ரயில் நிலையத்துக்குள் வந்து, 1-வது நடைமேடையில் மயிலாடுதுறைக் குப் புறப்பட தயாராக இருந்த கோவை- மயிலாடுதுறை சிறப்பு ரயில் முன் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, ரயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உட்பட 84 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காகித ராக்கெட் விடும் போராட்டம்

இதே கோரிக்கைகள் மற்றும் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி திருச்சி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று காகித ராக்கெட் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட காகித துண்டுப் பிரசுரங்களை ராக்கெட் போல மடித்து வீசினர். பின்னர், பிரதமர் மோடிக்கு அனுப்ப வேண்டிய கோரிக்கை மனுவை ஆட்சியர் சு.சிவராசுவிடம் வழங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண் கள் உட்பட 140 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜூ, சி.முருகேசன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 29 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.

அனைத்து விவசாயிகள் சங்க போராட்டக் குழு சார்பில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். இந்திய தொழிலாளர்கள் கட்சி மாநிலத் தலைவர் பி.ஆ.ஈஸ்வரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வீ.ஞானசேகரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரமேஷ் மற்றும் காங்கிரஸ், மதிமுக, விசிக, பகுஜன் சமாஜ், எஸ்டிபிஐ, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று வயல்வெளியில் இறங்கி கருப்புக் கொடி மற்றும் பச்சைக் கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அமைப்புச் செயலாளர் தர், மாவட்ட இணைச் செய லாளர் மீனம்பநல்லூர் வெங்கடே சன், நாகை ஒன்றியச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.செல்வராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் பி.மதிய ழகன் தொடங்கிவைத்தார். விவ சாய தொழிலாளர் சங்க தேசிய துணைத் தலைவர் ஏ.ராமமூர்த்தி பேசினார். நெடுங்காடு, திருமலை ராயன்பட்டினம் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x