Published : 28 Nov 2020 03:18 AM
Last Updated : 28 Nov 2020 03:18 AM

சட்டப்பேரவை தேர்தல் வருவதால்கடலூருக்கு சென்ற முதல்வர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர் கன்சால்பேட்டை, மாங்காய் மண்டி உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

எந்தப் புயலுக்கும் நேரில் செல்லாத முதலமைச்சர் தேர்தல் சட்டப் பேரவை தேர்தல் வருவதால் கடலூருக்கு சென்றுள்ளார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திடீர் நகர் பகுதியில் சூழ்ந்த வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பொதுமக்கள் மீட்கப் பட்டு கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக் கப்பட்டுள்ளனர். அவர்களை, திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோது பெரிதாக சாதித்து விடுவது போல் பேசி விட்டுச் சென்றார். தற்போது, புயலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் கோரி தமிழக அரசு அவரிடமே போதுமான நிதியை கேட்க வேண்டும். இதற்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக் குகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழக முதலமைச்சர் எந்தப் புயலுக்கும் வெளியே செல்லா தவர் சட்டப் பேரவை தேர்தல் நேரம் என்பதால் கடலூருக்கு சென்றிருக்கிறார். வேலூர் மாவட் டத்தில் மோர்தானா அணையி லிருந்து வெளியேறும் தண்ணீர் 10 ஏரிகளுக்கு செல்லும் வகை யில் கால்வாயை தூர்வார வலியு றுத்தி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்நடத்தியது. ஆனால், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாததால் தண்ணீர் தற்போது வீணாக பாலாற்றில் கலந்து கடலுக்கு செல்கிறது. இதேநிலைதான் தமிழகத்தில் உள்ளது.

குடிமராமத்து என்ற பெயரில் நீர்நிலைகளை தூர்வாரி விட்டோம் என பொய் கணக்கு காட்டியதன் விளைவு வேலூர் வெள்ளக்காடாக உள்ளது. நிரம்பிய நீர்நிலைகள் அதன் முழு கொள்ளளவை எட்டவில்லை. காரணம், நீர்நிலைகள் சரியாக தூர்வாரப்படாததுதான். புயலால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை கணக்கிட்டு மத்திய அரசுக்கு அனுப்பி உரிய நிதியை பெற வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x