Published : 27 Nov 2020 07:21 AM
Last Updated : 27 Nov 2020 07:21 AM

நிவாரணப் பொருட்களுடன் விழுப்புரத்துக்கு 100 பணியாளர்கள் பயணம்

நிவர் புயல் நிவாரணப்பணிக்காக விழுப்புரத்துக்கு புறப்பட்ட திருநெல்வேலி மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் 100 பேர் உள்ளிட்ட குழுவினரை, மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழியனுப்பி வைத்தார். படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி யிலிருந்து நிவர் புயல் நிவாரணப் பணிக்காக, மாநகராட்சி சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது தலைமை யில் 100 தூய்மை பணியாளர்கள் விழுப்புரம் நகராட்சி பகுதிக்கு நேற்று புறப்பட்டனர்.

இவர்களுடன், இரு உதவி பொறியாளர்கள், இரு சுகாதார ஆய்வாளர்கள், நான்கு துப்புரவு பணி மேற்பார்வையாளர்களும் சென்றுள்ளனர்.

அத்துடன், மூன்று லாரிகள், நான்கு நீரிறைக்கும் டீசல் இன்ஜின்கள், ஐந்து மரம் அறுக்கும் இயந்திரங்கள், 80 மூடை பிளிச்சீங் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் எடுத்துச்செல்லப்பட்டன.

மாநகராட்சி மைய அலுவலக த்தில் இருந்து, இக்குழுவினரை, ஆணையர் கண்ணன் வழியனுப்பி வைத்தார். மாநகர பொறியாளர் பாஸ்கர், மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார அலுவலர்கள் அரசகுமார், முருகேசன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x