Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM
பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். இவ்வாண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி யது. கொடியேற்றத்தை தொடர் ந்து பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஆ. ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. அருட்தந்தை எம்.அருள் மறையுரை வழங்கினார்.
இத் திருவிழா டிசம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் திருப்பலி, மறையுரை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான டிசம்பர் 2-ம் தேதி மாலையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீரும், தொடர்ந்து சவேரியாரின் திருவுருவ பவனியும் நடைபெறுகிறது. 10-ம் நாளான டிசம்பர் 3-ம் தேதி காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT