Published : 24 Nov 2020 03:15 AM
Last Updated : 24 Nov 2020 03:15 AM
திமுக அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்களுக்கான தேர்தல் பிரச்சாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை வகித்தார். சட்டத்திருத் தக்குழு உறுப்பினர் சுபா.சந்திர சேகர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கட்சியின் மண்டல பொறுப்பாளரும், தொமுச பொதுச் செயலாளருமான மு.சண் முகம் எம்.பி சிறப்புரையாற் றினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக-பாஜக கூட்டணி சட்டப் பேரவை தேர்தலிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது எங்கள் கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT