Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
அரியலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால், காய்ந்து போன மக்காச்சோள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொ லிக்காட்சி மூலம் வி வசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடை பெற்றது.
கூட்டத்தில், காணொலிக்காட்சி வாயிலாக விவசாயிகள் பேசியது:
அரியலூர் மாவட்ட விவ சாயிகள் சங்கத் தலைவர் ச.செங்கமுத்து: படைப்புழு தாக்குதல், மழை இல்லாததால் மக்காச்சோள பயிர்கள் காய்ந்து விட்டன. ஆகையால், அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, மக்காச்சோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவுத் துறை மூலம் அனைத்து உரங்களையும் கடன் பெறாத விவசாயிகளுக் கும் வழங்க வேண்டும்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவுத் தலைவர் தங்க. சண்முக சுந்தரம்: வேளாண் மண்டலமாக அறிவித்த பகுதிகளில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீடிக்க வேண்டும். மழைக்காலங்களில் வரும் உபரிநீரை கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு கொண்டு செல்ல கால்வாய் அமைக்க வேண்டும். பாதிப்படைந்த மக்காச்சோளப் பயிர், நெற்பயிர்களுக்கு வழங்கிய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
அம்பேத்கர் விவசாய இயக்க மாநிலத் தலைவர் எஸ்.ஆர்.அம் பேத்கர்வழியன்: சம்பா நெற்பயிரில் செம்படையான் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன்: மாவட்டத்தில் கட்டிடத்துடன் கூடிய நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். உளுந்து பயிரை காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். முந்திரியில் மகசூல் கிடைக்காமல் கடனில் தத்தளிக்கும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். தொடர்ந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அளித்த மனுக் களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT