Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM
திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கான கருத்து கேட்புக்கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமை தாங்கினார். துணைப்பொதுச்செயலாளர் பொன்முடி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். தேர்தல்அறிக்கைகுழு உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் கருத்துக்களை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றனர். பொதுமக்கள், சிறு, குறு தொழில்நிறுவன உரிமையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம், ஓய்வு பெற்றோர், விவசாய சங்கத்தினர் மற்றும் கட்சி பிரமுகர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். சுமார் 3 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதாக திமுகவினர் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் கௌதமசிகாமணி எம்பி, எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம்கார்த்திகேயன், மஸ்தான், மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம், மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில மருத்துவ அணி இணைச்செயலாளர் டாக்டர் லட்சுமணன், மாநில விவசாய அணிதுணைச்செயலாளர் அன்னியூர்சிவா, அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர்கள் புஷ்பராஜ் முருகன், மைதிலிராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT