Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM

பூனாம்பாளையத்தில் மியாவாக்கி முறையில் 4.26 ஏக்கரில் மாவட்டத்தின் 10-வது அடர்வனம் திருச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் மியாவாக்கி முறையிலான 10-வது அடர் வனம் அமைக்கும் திட்டம் பூனாம் பாளையத்தில் நேற்று தொடங் கப்பட்டது.

குறைந்த பரப்பில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு அடர்ந்த குறுங்காடு உருவாக் கும் முறையை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் ‘அகிரா மியா வாக்கி’ கண்டறிந்தார். இதனால், இந்த முறையிலான காடு வளர்ப்பு ‘மியாவாக்கி' என்று அழைக் கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக மாநகராட்சியின் ரங்கம் கோட்டத்துக்குட்பட்ட ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்த மான தெற்கு தேவி தெரு நந்தவனத்தில் 5,027 சதுர மீட்டர் இடத்தில் அடர்வனம் அமைக்கும் பணி 2019, டிச.20-ம் தேதி தொடங்கியது. இங்கு புங்கை, பாதாம், ஈட்டி, வாகை, வேங்கை, மலைவேம்பு, நீர்மருது, தேக்கு, சரக்கொன்றை, எலுமிச்சை, தூங்குவாகை, கொய்யா, மருதாணி, பூவரசு, வன்னி, பலா, நாவல், மகிழம், பெருநெல்லி, மல்லிகை, செவ்வரளி, மாதுளை, கறிவேப்பிலை, அகத்தி, கல்யாண முருங்கை, பாக்கு, இயல் வாகை, இலுப்பை, நாகலிங்கம், மூங்கில், வில்வம் என நாட்டு மரங்கள், அதிவேகமாக வளரக் கூடிய மரங்கள், அடர்த்தியாக வளரக்கூடிய மரங்கள் என 53 வகையான 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, பெருமாள் புரம், சஞ்சீவி நகரில் 2 இடங்கள், பாலாஜி நகர், திருவானைக்காவல் வடக்கு சீனிவாசநகர் ஆகிய இடங்களில் மியாவாக்கி முறையில் 25,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. அவை தற்போது 15 அடி உயரம் வரை வளர்ந்து செழிப்பாக காட்சியளிக்கின்றன.

அதைத்தொடர்ந்து, லால்குடி ரயில் நிலையம் அருகே 1.75 ஏக்கரில் 15,000 மரக்கன்றுகளும், உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயில் வளாகத்தில் 0.85 ஏக்கரில் 10,000 மரக்கன்றுகளும், கல்லக்குடி பேரூராட்சி லட்சுமி நகரில் 1.30 ஏக்கரில் 20,000 மரக்கன்றுகளும் மியாவாக்கி முறையில் நடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மண்ணச்சநல் லூர் வட்டம் பூனாம்பாளையம் கிராமத்தில் 50,000 மரக்கன்றுகள் நட்டு, 10-வது அடர்வனம் உரு வாக்கும் திட்டம் நேற்று தொடங் கியது. 4.26 ஏக்கரில் அமை யவுள்ள இந்த அடர்வனம் உரு வாக்கும் திட்டத்தை ஆட்சியர் சு.சிவராசு நேற்று தொடங்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், லால்குடி கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்சி மாவட்டத்தில் மியாவாக்கி முறையிலான அடர்வனம் தொடங்க காரணமாக இருந்து, பல்வேறு இடங்களிலும் அதை செயல்படுத்தி வரும் லால்குடி கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

தமிழ்நாட்டில் ஒரே இடத்தில் 50,000 மரக்கன்றுகள் நடுவது பூனாம்பாளையத்தில்தான். இங்கு 5 நாட்களில் 50,000 மரக்கன்றுகளும் நடப்பட்டு விடும். அடர்வனம் பகுதியில் காற்று மாசு கட்டுப்படுத்தப்படுவதுடன், பறவைகள், பூச்சிகள், தேனீக்கள் அதிகளவு வரும். அவற்றின் மூலம் உயிர்ச்சூழல் மேம்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x