Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

தென்காசி மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம் நெல்லை மாவட்டத்தில் 13.16 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியலை ஆட்சியர்கள் வெளியிட்டனர்

திருநெல்வேலியில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வி.விஷ்ணு வெளியிட்டார்.

திருநெல்வேலி/ தென்காசி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் வி.விஷ்ணு வெளியிட்டார். மாவட்ட வருவாய்அலுவலர் பெருமாள் பெற்றுக்கொண்டார்.

செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

வரைவு வாக்காளர் பட்டியலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள்- 6,45,494, பெண்கள்- 6,71,179, இதரர்- 89 பேர்என, மொத்தம் 13,16,762 வாக்காளர்கள் உள்ளனர். சட்டப் பேரவை தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் விவரம்: திருநெல்வேலி- 2,82,127, அம்பாசமுத்திரம்- 2,37,004, பாளையங்கோட்டை- 2,63,944, நாங்குநேரி- 2,71,122, ராதாபுரம்- 2,62,565.

கடந்த 14.2.2020-ன்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 13,30,118 வாக்காளர்கள் இருந்தனர். கடந்த 14.2.2020 முதல் 31.10.2020 வரை வாக்காளர் பட்டியலில் 5,008 பேர்சேர்ந்துள்ளனர். 18,364 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2,743 பேர் திருத்தம்செய்துள்ளனர். 462 பேருக்கு முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகார்களை ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு 0462-2501181, கோட்டாட்சியர் அலுவலகம் 0462-2501333, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகம்- 04634260124 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம். மேலும்அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

தென்காசி

தென்காசி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர்சமீரன் நேற்று வெளியிட்டார். அதனை, மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா பெற்றுக்கொண்டார்.

செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் கடந்தபிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்தவாக்காளர் எண்ணிக்கை 13,03,308 ஆக இருந்தது. அதன் பின்னர் தொடர் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில் 3,438 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 15,065 பேர் நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது ஆண் வாக்காளர்கள் 6,34,450, பெண் வாக்காளர்கள் 6,57,191, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 40 பேர் என, மொத்த வாக்காளர் 12,91,681 பேர் உள்ளனர். சங்கரன்கோவில் தொகுதியில் 2,45,181 வாக்காளர்கள், வாசுதேவநல்லூர் தொகுதியில் 2,32,890வாக்காளர்கள், கடையநல்லூர் தொகுதியில் 2,79,091 வாக்காளர்கள், தென்காசி தொகுதியில் 2,82,231 வாக்காளர்கள், ஆலங்குளம் தொகுதியில் 2,52,488 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

வரைவு வாக்காளர் பட்டியலை வட்டாட்சியர் அலுவலகங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச் சாவடி அமைவிடங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஆகியவற்றில் பார்வையிட்டு, தங்கள் பெயர் உள்ளதா என்பதை வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். 1.1.2021-ல் 18 வயது நிறைவடைபவர்கள் அல்லது 31.12.2002-க்கு முன்பாக பிறந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை புதிதாக சேர்க்க மனு அளிக்கலாம்.

நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர்12, 13-ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறும்.

வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள முகாம்களில் மனு அளிக்கலாம். மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் www.nvsp.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 20.1.2021-ல் வெளியிடப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x