Published : 16 Nov 2020 03:14 AM
Last Updated : 16 Nov 2020 03:14 AM

பாமக, தவாக-வினர் இடையே மோதல்; தகராறை தடுக்கச் சென்ற காவலர் காயம் இருதரப்பிலும் 12 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

அரியலூர்

செந்துறை அருகே பாமக, தவாக-வினர் இடையே நடைபெற்ற மோதலை தடுக்கச் சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் காயமடைந்தார். இதுதொடர் பாக, இருதரப்பிலும் 12 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் செந் துறையை அடுத்த இலைக்கடம் பூரில் வசித்து வரும் சாமிதுரை(55), பாமகவின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக உள்ளார். அதே தெருவில் வசித்துவரும் சாமிநாதன்(52) என்பவர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சாமிநாதன் குடும்பத்தினர் வாசலில் பட்டாசு வெடித்தபோது, அங்கு காரில் வந்த பாமகவினருடன் தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் சாமிநாதன் மனைவியும், மனைவியின் தங்கையும் லேசான காயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற செந்துறை போலீஸார், தகராறை தடுக்க முயன்றபோது காவலர் துரைமுருகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அவர் காயமடைந்தார்.

இதையடுத்து, காயமடைந்த அனைவரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தொடர்ந்து, எஸ்.பி ஆர்.னி வாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு சென்று, சாமிதுரை மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரைப் பிடித்து, செந்துறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதை யறிந்த பாமகவினர் 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா தலைமையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். பின்னர், பாமக மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவனிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி யதைத் தொடர்ந்து, சாமிதுரை உள்ளிட்டோர் விடுவிக்கப் பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் செந்துறை காவல் நிலையம் முன்பு 3 மணிநேரம் பதற்றம் காணப்பட்டது.

இதற்கிடையே, பாமக தரப் பில் பெரம்பலூர் மாவட்டம் வயலூரைச் சேர்ந்த அன்புராஜா (எ) டீசல்ராஜா(33), துளார் கணே சன்(42), செந்துறை விஜய்(19), பெரியாகுறிச்சி செல்வம்(19) ஆகிய 4 பேர் மீதும், தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த இலைக்கடம்பூர் ராஜசேகர்(38), வேல்(42), வெற்றிவேல்(29), அகரம் முகமது ரியாஸ்(24) உள்ளிட்ட 8 பேர் மீதும் செந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x