Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
மதுரையில் விபத்து மற்றும் நெரி சலைக் கட்டுப்படுத்த நான்கு வழிச் சாலை முதல் சிறிய சாலைகள் வரை வழிநெடுகிலும் போலீஸார் பேரிகார்டுகளை வைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இரவில் பேரிகார்டு களால் விபத்துகளும் ஆங்காங்கே நடக்கின்றன.
கடந்த காலத்தில் நான்கு வழிச் சாலைகளில் விபத்துகளைத் தடுக்க முக்கியச் சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்துக் காவல்துறையினர் வேகத்தடைகளை அமைப்பது வழக் கமாக இருந்தது.
சில ஆண்டாக நான்குவழிச் சாலை முதல் உள்ளூர் நகரச் சாலை வரை நெரிசலைக் குறைக்க பேரிகார்டுகளை வைப்பது அதிகரித்துள்ளது.
வணிக நிறுவனங்கள் விளம்பரம் கிடைப்பதால் அதிகளவில் பேரிகார்டு களை காவல்துறை உதவியோடு ஆங் காங்கே வைத்துக் கொள்கின்றனர்.
போலீஸாரும் தேவையில்லாத இடங்களில்கூட பேரிகார்டுகளை வைத்துள்ளனர். தற்போது அதிக அளவு பேரிகார்டுகளால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. கே.கே.நகர் ரவுண்டானா பகுதியில் இருந்து செல்லும் மேலூர் சாலையில் பல இடங்களில் பேரிகார்டுகளை வைத்துள்ளனர். மலர் சந்தை சந் திப்பில் ஏற்கெனவே தானியங்கி சிக்னல் உள்ளது. அதைக் கடந்து 100 மீட்டர் தொலைவிலேயே இரு பேரிகார்டுகளை வைத்துள்ளனர். இதனால், இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
ஒத்தக்கடை, அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை, பெரியார் பஸ் நிலையம், பைபாஸ் சாலை, தபால்தந்தி நகர், டிவிஎஸ் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், பைகாரா, திருநகர் உள்ளிட்ட இடங் களிலும் பேரிகார்டுகள் வைக்கப் பட்டுள்ளன. அவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லை, எச்சரிக்கை பலகைகளும் இல்லை. சில சமயம் பலத்த காற்று மழையால் பேரிகார்டுகள் சாலையில் விழுந்து கிடக்கின்றன. இரவில் வேகமாக வாகனத்தில் வரு வோர் இதை அறியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்தராஜ் கூறியதாவது: மதுரையில் சாலைகள் குறுகலாக உள்ளன. மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறை யும் சாலைகளில் வேகத் தடைகள் மற்றும் டிவைடர்களை உயரமாக அமைத்தால் பேரிகார்டுகள் இன்றி விபத்துகளைத் தவிர்க்கலாம். ஆனால், வணிக நிறுவனங்கள் வழங்கும் பேரிகார்டுகளை வைத்து விட்டாலே நெரிசல் குறையும் என எண்ணுகின்றனர். அதேநேரத்தில் மதுரை சாலைகளில் பேரிகார்டுகளை வைப்பதால் நெரிசல் மற்றும் விபத் துகள் தான் ஏற்படுகின்றன என்றார்.
இதுகுறித்து போக்குவரத்து உதவிக் காவல் ஆணையர் மாரியப்பன் கூறியதாவது: பெரும்பாலும் மெயின் ரோடுகளில் இருந்து பிரியும் கட் ரோடுகளில் செல்வோர் திடீரென வாகனங்களைத் திருப்புவதால் விபத்துகள் நடக்கின்றன. அதே போன்று, கட் ரோடுகளில் இருந்து மெயின் ரோடுகளுக்கு வருவோரும் இருபுறமும் வாகனங்களைச் சரியாக கவனிப்பதில்லை. இதுபோன்ற இடங் களில் விபத்துக்களைத் தடுக்கவே பேரிகார்டுகளை வைத்துள்ளோம்.
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அனைத்து பேரி கார்டுகளிலும் ஒளிரும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்படும்.
வேகத்தடைகளில் மஞ்சள் கோடு களை வரைய காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தேவையில்லாத இடங்களில் இருக்கும் பேரிகார்டுகள் அகற்றப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT