Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM

கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம சுகாதர செவிலியர் நலச் சங்கத்தினர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.காயத்ரி தேவி தலைமையில் 300-க்கும் அதிகமான செவிலியர் கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு தொடங்கவுள்ள 2,000 மினி கிளினிக்குகளில் கிராம சுகாதார செவிலியர்களை பகுதி சுகாதார செவிலியராக பதவி உயர்வுடனும், பள்ளிச் சிறார் நலத் திட்டத்தில் 385 பகுதி சுகாதார செவிலியர்களையும் பணியமர்த்த வேண்டும். சமுதாய சுகாதார செவிலியர்களுக்கு தாய்- சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்கி, துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுநராக பணி நியமனம் செய்ய வேண்டும். ஆண் பணியாளர்களுக்கு 11.9.1995 முதல் சுகாதார ஆய்வாளர் நிலை-1 வழங்கியதைப்போல, கிராம சுகாதார செவிலியர்களுக்கும் 1.1.1996 முதல் முன்தேதியிட்டு நிலை-1 வழங்க வேண்டும். கிராம, பகுதி, சுகாதார செவிலியருக்கு வழங்கப்படும் இருசக்கர வாகன கடனுக்கு வட்டி தள்ளுபடி, 30 சதவீத மானியம் மற்றும் எரிபொருள், பராமரிப்புத் தொகை ஆகியவற்றையும் வழங்க வேண் டும். கரோனா தடுப்பு முன்கள பணியாளர்களான கிராம, பகுதி, சுகாதார செவிலியர்களுக்கு சிறப் பூதியம், பயணப்படி வழங்க வேண்டும். ஆண் குடும்ப நல அறுவைச் சிகிச்சை குறித்து அரசு விளம்பரம் செய்து, பயனா ளர்களுக்கு உடனடியாக பணப் பலன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x