Published : 08 Nov 2020 03:13 AM
Last Updated : 08 Nov 2020 03:13 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு குறைந்த விலையில் பட்டாசு விற்பனையை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை அங்காடியில் தீபாவளியை முன் னிட்டு குறைந்த விலையில் பட் டாசு விற்பனை கடை நேற்று திறக் கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை தாங்கினார். பட்டாசு விற்பனையை தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், ஆற்காடு, திருப்பத்தூர், வாணியம்பாடி, காட்பாடி மற்றும் வேலூர் தலைமை யகத்தில் உரிமம் பெற்று பட்டாசு விற்பனை நடைபெறுகிறது. இந்த ஆண்டு விற்பனைக்காக இதுவரை ரூ.1.30 கோடிக்கு பட்டாசு வரப் பெற்றுள்ளது.
இதில், திருப்பத்தூர் மாவட்டத் தில் மட்டும் ரூ.55 லட்சத்துக்கு பட்டாசு விற்பனை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கரோனா முன்னெச்சரிக்கை யாக கூட்ட நெரிசலை தவிர்க்கதிருப்பத்தூர் நகரில் வசிப்பவர் களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பட்டாசு கொள்முதல் செய்தால் வீடுகளுக்கே சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு தேவையான பருப்பு வகைகள், எண்ணெய் வகைகளை திருப் பத்தூர் கிளை சுய சேவைப் பிரிவில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏழுமலை, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பட்டாசு விற்பனை, திருவண்ணாமலை துராபலித் வீதியில் உள்ள கற்பகம் கூட்டுறவு விற்பனை சிறப்பு அங் காடியில் நேற்று தொடங்கியது.மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்து, பட்டாசு விற் பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறும்போது, “தி.மலை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 14 இடங்களில் பட்டாசு விற்பனை நடைபெறும். முன்னணி நிறுவனங்களின் பட்டாசுகள் விற்பனைக்கு வந் துள்ளது. ரூ.1 கோடி அளவுக்கு பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பெறும் வகையில் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. காலை முதல் இரவு 10 மணி வரை விற்பனை நடைபெறும். தமிழக அரசின் வழிகாட்டு தல் நெறிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் 7 மணி வரை யும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பொதுமக்கள் பட்டாசு களை வெடிக்க வேண்டும்” என்றார்.
இதில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ் குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் காமாட்சி, துணைப்பதிவாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT