Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் தொழிலாளர்கள் காத்திருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ஏஐடியுசி சுங்கச்சாவடி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், ஊதிய உயர்வு, போனஸ் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காத்திருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். பொருளாளர் தங்கராஜ் வரவேற்றார். ஏஐடியுசி மாவட்டக் குழு உறுப்பினர் முனியன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர்கள் சிவராஜ், கண்ணு உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.
சென்னை மத்திய தொழிலாளர் துறையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக உள்ள ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.
2019-2020-ம் ஆண்டுக்கான வருடாந்திர போனஸாக 75 நாள் ஊதியத்தை வழங்க வேண்டும். கட்டாய ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். கிளை துணை செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT