Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு நிறைவு மண்ணை நிரப்பி குழிகள் மூடல்

கீழடியில் இயந்திரம் மூலம் மூடப்படும் அகழாய்வுக் குழிகள்.

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. கீழடியில் மட்டும் 20 குழிகள் தோண்டப்பட்டு பானைகள், தரைத்தளம், உறைகிணறு உள்ளிட்ட 1,400-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.

இந்நிலையில் அகழாய்வுப் பணிகள் செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இருந்தபோதிலும் தொடர்ந்து ஆவணப்படுத்தும் பணி நடந்து வந்தது. தற்போது அப்பணியும் நிறைவடைந்த நிலையில் நேற்று அகழாய்வுக் குழிகளைத் தொல்லியல் துறையினர் இயந்திரம் மூலம் மண் கொண்டு மூடினர். குழிகளை மீண்டும் எளிதாக தோண்ட வசதியாக குழியை முதலில் தார்ப்பாயால் மூடி, அதன்பிறகு மண் கொண்டு மூடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x