Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

திருநெல்வேலி வண்ணார்பேட்டை யில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கடந்த ஆண்டைப்போல் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

போனஸ் கோரிக்கை தொடர்பாக தொழிற் சங்கங்க ளோடு பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொமுச மாநில அமைப்பு செயலாளர் டி.தர்மன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் முருகன், எச்எம்எஸ் மாநில துணைத்தலைவர் பி. சுப்பிரமணியன், டிடிஎஸ்எப் மாவட்டச் செயலாளர் எஸ்.சந்தானம், ஏஐசிசிடியூ மாவட்டச் செயலாளர் கே.கணேசன், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் எஸ்.காசிவிஸ்வநாதன், சிஐடியூ மாவட்ட செயலாளர் ஏ.மோகன் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x