Published : 06 Nov 2020 03:18 AM
Last Updated : 06 Nov 2020 03:18 AM

தீபாவளி பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்பது தவறான தகவல் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு திட்டவட்டம்

கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு. அருகே, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்பது தவறான தகவல் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுத் துறையின் திட்ட பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திரு வண்ணாமலை ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை அமைச் சர் செல்லூர் கே.ராஜு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன், சிறப்பு பணி அலுவலர் ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் அந்தோணிசாமி ஜான் பீட்டர், ரவிக்குமார், மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார், மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் ராஜன் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறும்போது, “தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் திட்டம் என்பது முதல்வர் பழனிசாமியின் சிறப்பான திட்ட மாகும். இதில், திருவண்ணா மலை மாவட்டத்தில் 212 கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜவ்வாதுமலையில் உள்ள மக்களுக்கு வீடு தேடி சென்று பொருட்கள் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். ரேஷன் கடையில் தவறு நடைபெறுவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை. திமுக ஆட்சியில்தான் சரக்கு ரயில் மற்றும் கப்பலில் ரேஷன் அரிசி கடத்தினார்கள். அதிமுக ஆட்சியில் அதுபோன்று நடைபெறவில்லை. கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

316 மெட்ரிக் டன் வெங்காயம் வாங்கப்பட்டுள்ளது. இன்று (நேற்று) 11 மெட்ரிக் டன் வெங் காயம் வந்துள்ளது. பசுமை அங்காடி மட்டும் அல்லாமல் அம்மா சிறு பல்பொருள் அங்காடி யிலும் வெங்காயம் விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2 ஆயிரம் வழங் கப்படும் என்பது தவறான தகவல். எது செய்தாலும், மக்களின் நலன் சார்ந்தே முதல்வர் நடவடிக்கை எடுப்பார். கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்குவதில் முறைகேடு நடப்பதற்கு வழியே கிடையாது” என்றார்.

முன்னதாக, கீழ்பென்னாத் தூரில் ரூ.30 லட்சத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வணிக வளாகத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்து வைத்தார். இதேபோல், தண்டராம்பட்டு, கீரனூர், ஆவூர், தண்டரை, இளங்காடு கிராமத்தில் ரூ.1.15 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 5 கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும் அவர், ரூ.121.35 கோடி மதிப்பில் 16,960 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x