Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM

திருவள்ளூர் மாவட்ட ஐடிஐ-ல் மாணவர் சேர்க்கை நவம்பர் 20 வரை நீட்டிப்பு

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் வடகரை, அம்பத்தூர் அரசினர் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழில் பிரிவுகளில் 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையங்களில், வரும் 20-ம் தேதிவரை நேரடி சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சேர மாணவர்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வரை, மாணவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.

மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவ-மாணவியர் அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் வரும் 20-ம் தேதிக்குள், அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சமர்ப்பித்து, சேர்க்கை ஆணையை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x