Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM

கல்குவாரி விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

விழுப்புரம்

திண்டிவனம் அருகே இரண்டு கல் குவாரிகளில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திண்டிவனம் அருகே தொள்ளாமூர் கிராமத்தில் உள்ள கல் குவாரியில், கரசானூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி(25) என்பவர் நேற்று முன்தினம் பொக்லைன் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தார். பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் கோபி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குன்னம் கிராமத்தைச் சேர்ந்த காந்த் (23) என்பவர் காயமடைந்தார். இதுகுறித்து கிளியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

வானூர் அருகே திருவக் கரையில் உள்ள கல் குவாரி ஒன்றில் நேற்று காலை திருவக் கரை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(45), ரங்கராஜ்(53) ஆகியோர் பாறைகளை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாறை சரிந்ததில் இடிபாடுகளில் சிக்கி ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரங்கராஜ் என்பவர் காயமடைந்தார். இதுகுறித்து வானூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x